பக்கங்கள்

தமிழ்சொல் தெளிவோம்

இதழ் - 78                                                                                                   இதழ் - 
நாள் : 22-10-2023                                                                                     நாள் : -0-௨௦௨௩
  
    
 
தமிழ்சொல் தெளிவோம்
 
 

தமிழ்நாட்டுத் தமிழில் கலந்துள்ள பிறமொழிச் சொற்கள்


தமிழ்சொற்கள்


சக்தி
ஆற்றல்

சகஜம்
வழக்கம்

சந்நியாசி
துறவி

சன்மார்க்கம்
நல்வழி


கன்ஸ்ட்ரக்‌ஷன்

கட்டுமானம்
 
  
  • இன்றைய இளைஞர்கள் தமது சக்தியை முறையாகப் பயன்படுத்த வேண்டும்.
  • இன்றைய இளைஞர்கள் தமது ஆற்றலை முறையாகப் பயன்படுத்த வேண்டும்.

  • இப்போதெல்லாம் ஏய்த்துப்பிழைப்பது  சகஜமாகக்  காணப்படுகிறது
  • இப்போதெல்லாம் ஏய்த்துப்பிழைப்பது  வழக்கமாகக்  காணப்படுகிறது
 
  • சமண சந்நியாசியின் வாழ்வு  மிகக் கடினமாக இருந்தது என்பதை வரலாற்றின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
  • சமணத்  துறவியின் வாழ்வு  மிகக் கடினமாக இருந்தது என்பதை வரலாற்றின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

  • வள்ளலார் சன்மார்க்கத்தைப் பின்பற்ற வலியுறுத்தியுள்ளார்.
  • வள்ளலார் நல்வழியினைப் பின்பற்ற வலியுறுத்தியுள்ளார்.

  • தற்போது கன்ஸ்ட்ரக்‌ஷன் பணி சிறப்பாக நடைபெறுகிறது.
  • தற்போது கட்டுமானப் பணி சிறப்பாக நடைபெறுகிறது.
 
  மேலும் வரும் வாரங்களில் தமிழ்மொழியில் வேறுமொழிகளின் சொற்கலப்பினை பிரித்துணர்ந்து அறிவோம்.
 
 
சாந்தி மகாலிங்கசிவம்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment