இதழ் - 163 இதழ் - ௧௬௩
நாள் : 28 - 06 - 2025 நாள் : ௨௮ - ௦௬ - ௨௦௨௫
தமிழ் இலக்கியத்தில் தலை சிறந்த நூலாக இன்றளவும் கருதப்படும் திருக்குறளை கொடுத்தவர் திருவள்ளுவர் ஆவார். இத்திருக்குறள் ‘உலகப் பொதுமறை’ எனப் போற்றப்படுகிறது.
சமண சமயத்தை தன் நெறியாகக் கொண்ட திருவள்ளுவர் சமணத்தின் அறக்கொள்கைகளைத் திருக்குறளாகக் கொடுத்துள்ளார்.
இரண்டே அடிகளில் வாழ்வுக்குத் தேவையான அறக்கருத்துக்களை மிக இலகுவாக எடுத்துரைத்து தமிழுக்குச் சிறப்புச் செய்தவர் தமிழ் புலவரான திருவள்ளுவர் எனில் அது மிகையல்ல.
வாழ்வில் மக்கள் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கங்களை அறம், பொருள், இன்பம் என்ற மூன்று தலைப்பிலே இரண்டு அடிகளில் திருவள்ளுவர் கொடுத்துள்ளார் எனில் தமிழின் சிறப்பை என்ன சொல்வது.
"வள்ளுவன் தன்னை உலகிற்கு தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு" என எல்லோராலும் போற்றப்பட்டு தமிழுக்கு சிறப்பு சேர்த்தவர் திருவள்ளுவர்.
திருக்குறளின் சிறப்பினை உணர்ந்து பல நாட்டினரால் அது மொழி பெயர்க்கப்பட்டது.
தமிழின் சிறப்பை அறிய திருக்குறளில் காணப்படும் சில செய்திகளை பார்க்கலாம்.
- திருக்குறளில் ஒன்பது என்ற எண் (9) பற்றி எதுவும் சொல்லப்படவில்லை.
- மரங்களில் பனை மரமும் மூங்கில் மரமும் மாத்திரமே திருக்குறளில் சொல்லப்பட்டுள்ளது.
- மலர்களில் அனிச்ச மலரும் குவளை மலரும் மட்டுமே சொல்லப்பட்டுள்ளன.
- பழங்களில் நெருங்கி பழம் மட்டுமே சொல்லப்பட்டுள்ளது.
- விதைகளில் குன்றுமணி மட்டுமே சொல்லப்பட்டுள்ளது.
- திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது.
- தமிழ் மொழிக்கு மகுடமான திருக்குறளில் தமிழ் என்ற சொல் காணப்படவில்லை என்பது வியப்புக்குரிய ஒன்றாக காணப்படுகிறது.
- திருக்குறள் 107 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.
இவ்வாறு இன்னும் பல சிறப்புகளைக் கொண்ட தமிழ் நூலான திருக்குறளை ஒரு ஒழுங்கமைப்பின் கீழ் திருவள்ளுவர் இயற்றியுள்ளார்.
அனைத்துக் குறள்களும் இரண்டு அடிகளைக் கொண்டதாகவும், முதல் அடியில் நான்கு சீர்களும் இரண்டாம் அடியில் மூன்று சீர்களும் கொண்டு, இரண்டு அடிகளில் மனிதர்களுக்கு வேண்டிய அறத்திணைச் சொன்ன அறநூலான திருக்குறளைக் கொடுத்த தமிழ் புலவரான திருவள்ளுவரின் பெருமையினை கூறுகிறது திருவள்ளுவமாலை என்ற நூல்.
(வரும் கிழமையும் தமிழ்ப்புலவர் வருவார்...)
சாந்தி மகாலிங்கசிவம்
முனைவர் பட்ட ஆய்வாளர்
தமிழ்த்துறை
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் - 641020
No comments:
Post a Comment