பக்கங்கள்

தமிழக ஊர்களின் இன்றைய பெயரும் அன்றைய பெயரும்

இதழ் - 72                                                                                        இதழ் - 
நாள் : 10-09-2023                                                                          நாள் : 0-0௯-௨௦௨௩
 
 
 
 
கிடங்கில்
 
      பழங்காலத்தில் அகழி சூழ்ந்த கோட்டையைக் கிடங்கில் என்று கூறுவதுண்டு. கிடங்கில் என்பதற்கு வைப்பிடம் என்று பொருள். அதாவது அரசன் தன்னுடைய ஆட்சிக்காலத்தின்போது தனக்குத் தேவையான பொருட்களைச் சேமித்து வைத்த இடம் அல்லது வீடு கிடங்கில் எனப்பட்டது. 
 
    முன்னாளில் கிடங்கில் என்னும் பெயருடைய கோட்டையின் தலைவனாகவும், கொடை வள்ளலாகவும் விளங்கிய நல்லியக்கோடன் என்ற சிற்றரசனது பெருமையைச் சிறுபாணாற்றுப்படை கூறுகின்றது. அவன் காலத்தில் அவ்வூர், கோட்டை மதில்களாலும், அகழிகளாலும் நன்றாக பாதுகாப்புச் செய்யப்பட்டிருந்தது. இன்றும் அங்குக் காணப்படும் கிடங்கில் சிதைந்த சுவர்களும் தூர்ந்த கிடங்குகளும் அதன் பழம் பெருமையை எடுத்துக்காட்டுகின்றன. கிடங்கால் என்னும் பெயர் கொண்டு வழங்கும் அவ்வூருக்கு அருகில் திண்டிவனம் இப்போது வளர்ந்து வரும் சிறந்த நகரமாகத் திகழ்கின்றது.
 
 
இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .
 
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர் 
துறைத்தலைவர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
 

No comments:

Post a Comment