பக்கங்கள்

தமிழ்ச்சொல் தெளிவோம்

இதழ் - 70                                                                                        இதழ் - 0
நாள் : 27-08-2023                                                                         நாள் : -0-௨௦௨௩

 
   
 
தமிழ்ச்சொல் தெளிவோம்
  

தமிழில் வழங்கப்படும் பிற மொழிச்சொற்கள்

தமிழ்ச்சொற்கள்

போனஸ்
மகிழ்வூதியம்
டைரி
நாட்குறிப்பு
கீர்த்தி
புகழ்
சாவகாசம்
விரைவின்மை
உஷ்ணம்
வெப்பம்
 
  • போனஸ் கையில் கிடைத்ததும் மகிழ்ச்சி அடைந்தான்.
  • மகிழ்வூதியம் கையில் கிடைத்ததும் மகிழ்ச்சி அடைந்தான்.

  • ஒவ்வொரு நாளும் டைரி எழுதுவது நல்ல பழக்கம் ஆகும்.
  • ஒவ்வொரு நாளும் நாட்குறிப்பு எழுதுவது நல்ல பழக்கம் ஆகும்.
 
  • சந்திராயன் மூன்றின் வெற்றியைத் தொடர்ந்து இந்தியாவின் கீர்த்தி உலகமெங்கும் பரவியது.
  • சந்திராயன் மூன்றின் வெற்றியைத் தொடர்ந்து இந்தியாவின் புகழ் உலகமெங்கும் பரவியது.

  • குறிப்பிட்ட காலத்தில் ஒரு வேலையைச்  செய்து முடிக்காமைக்குக் காரணம் சாவகாசமாக அவ்வேலையைச் செய்வதே.
  • குறிப்பிட்ட காலத்தில் ஒரு வேலையைச் செய்து முடிக்காமைக்குக் காரணம் விரைவின்மையே.

  • இவ்வாண்டு உஷ்ணம் அதிகமாகக் காணப்படுகிறது.
  • இவ்வாண்டு வெப்பம் அதிகமாகக் காணப்படுகிறது.

 
    மேலும் வரும் வாரங்களில் தமிழ்மொழியில் வேறுமொழிகளின் சொற்கலப்பினை பிரித்துணர்ந்து அறிவோம்.
 
 
சாந்தி மகாலிங்கசிவம்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment