பக்கங்கள்

தமிழ்ச்சொல் தெளிவோம்

 
இதழ் - 26                                                                                    இதழ் -
நாள் : 23-10-2022                                                                      நாள் : --௨௦௨௨

     
 
பாரசீக மொழி

     இந்தோ - ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த பாரசீக மொழி, ஆங்கிலேய ஆட்சிக்கு முன்னர் இந்தியாவில் இரண்டாம் மொழியாக வட இந்திய மக்களால் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
 
  • அம்மாவுக்குத் தன் மகன் மீது அலாதி அன்பு உள்ளது.
  • அம்மாவுக்குத் தன் மகன் மீது தனியான அன்பு உள்ளது.
  • பஞ்சாயத்தில் சொல்லப்பட்ட தீர்ப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டது.
  • அறம்கூறு அவையத்தில் சொல்லப்பட்ட தீர்ப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டது.
  • புகார்க் கடிதம் எழுதிப் பழகு.
  • முறையீட்டுக் கடிதம் எழுதிப்பழகு.
  • எனது அப்பா குமாஸ்தாவாகப் பணி செய்கிறார்.
  • எனது அப்பா எழுத்தராகப் பணிசெய்கிறார்.
  • எனது ஆய்வுக்காலம் முடிவடைய சுமார் ஒரு மாதமே உள்ளது.
  • எனது ஆய்வுக் காலம் முடிவடைய ஏறக்குறைய ஒரு மாதமே உள்ளது.
 
 ( தொடர்ச்சி அடுத்த இதழில் . . . )

சாந்தி மகாலிங்கசிவம்

தமிழாசிரியர்
ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர்–641020

No comments:

Post a Comment