பக்கங்கள்

இலக்கணம் கற்போம்

இதழ் - 121                                                                                           இதழ் - ௧
நாள் : 18- 08 - 2024                                                                        நாள் :  -  - ௨௦௨௪
 


அன்மொழித்தொகை

     வேற்றுமை, வினை, பண்பு, உவமை, உம்மை ஆகிய தொகைநிலைத் தொடர்களில் உருபுகளும் அவை அல்லாத வேறு சொற்களும் மறைந்து நின்று பொருள் தருவது அன்மொழித்தொகை (அல் + மொழி + தொகை) எனப்படும்.

சான்று

  •      பொற்றொடி வந்தாள் (தொடி - வளையல்)

     இத்தொடரில் பொற்றொடி என்பது பொன்னாலான வளையல் எனப் பொருள் தரும். இத்தொடர் வந்தாள் என்னும் வினைச்சொல்லைத் தழுவி நிற்பதால் பொன்னாலாகிய வளையலை அணிந்த பெண் வந்தாள் என்னும் பொருள் தருகிறது. இதில் 'ஆல்' என்னும் மூன்றாம் வேற்றுமை உருபும் 'ஆகிய' என்னும் அதன் பயனும் மறைந்து வந்து, வந்தாள் என்னும் சொல்லால் பெண் என்பதையும் குறிப்பதால் இது மூன்றாம் வேற்றுமைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை எனப்படும்.

  • சிவப்புச் சட்டை பேசினார் 
  • முறுக்கு மீசை வந்தார் 
     இவற்றில் சிவப்புச் சட்டை அணிந்தவர் பேசினார், முறுக்கு மீசையை உடையவர் வந்தார் எனத் தொகைநிலைத் தொடர் அல்லாத வேறு சொற்கள் மறைந்து நின்று பொருள் தருகின்றன.

திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய 
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி 
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment