பக்கங்கள்

இலக்கணம் கற்போம்

இதழ் - 196                                                                           இதழ் - ௧
நாள்  :  05 / 04 / 2026                                                     நாள்   :  0 / 0 / ௨௦௨


இலக்கணம் கற்போம்
 
பாடாண்படலம்

பாடாண்படலம்

    புகழ், வலிமை, கொடைத்தன்மை, இரக்கம் ஆகியவற்றில் சிறப்பைப் பெற்ற ஓர் ஆண்மகனுடைய ஒழுக்கத்தைக் கூறுவது பாடாண் திணை எனப்படும்.

பாடாண்திணை துறைகள் மொத்தம் – 47

1. வாயில்நிலை
புலவன் ஒருவன் தன் வருகையை மன்னனுக்கு உரைப்பாய் என 
     வாயிற் காவலனிடம் கூறுவது.

2. கடவுள் வாழ்த்து
அரசனால் வணங்கப்படுகின்ற கடவுளருள் ஒருவரை உயர்த்திக் கூறுவது.

3. பூவைநிலை
காயாம்பூவினைப் புகழ்ந்துக் கூறுவது.

4. பரிசில்துறை
இரவலன் தான் விரும்பியப் பொருளை அரசனிடமிருந்து கேட்பது.

5. இயல்மொழி வாழ்த்து
முன்னோர் கொடுத்ததைப் போல நீயும் கொடுக்க வேண்டும் என்றல் மற்றும் 
     அரசனுடைய இயல்பினை எடுத்துக் கூறுவது.

6. கண்படைநிலை
அரசனுடைய ஆழ்ந்த உறக்கத்தைச் சிறப்பிப்பது.

7. துயில்நிலை
உறங்கும் அரசனை அவ் உறக்கத்திலிருந்து எழுப்புவது.

8. மங்கலநிலை
துயில் எழுந்த அரசனுக்கு வாழ்த்துக் கூறுதல் மற்றும் ஓர் அரசன் இயல்பாகவே 
    ஆக்கத்தைப் பெற்றான் எனக் கூறுதல்.

9. விளக்குநிலை
அரசனுடைய திருவிளக்கு நிலையைக் கூறுவது மற்றும் அரசனைக் கதிரவனோடு 
     ஒப்பிட்டுக் கூறுதல்.

10. கபிலை கண்ணிய புண்ணியநிலை
அரசன் கொடையாகக் கொடுக்கும் பசுவினுடையச் சிறப்பினைக் கூறுதல்.

இலக்கணம் தொடரும் . . .

திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய 
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி 
கோயம்புத்தூர்- 641020

No comments:

Post a Comment