பக்கங்கள்

இலக்கணம் கற்போம்

இதழ் - 36                                                                                  இதழ் - ௩௬
நாள் : 01-01-2023                                                                      நாள் : 0 - 0 - ௨௦௨
  
 
 
பெயர்ச்சொல்லின் வகைகள் 
 
இடுகுறிப்பெயர்
  • தமிழ்மொழியில் பெயர்ச்சொல் இடுகுறி, காரணம் என இரண்டு வகையாக அமைந்துள்ளது.
 
இடுகுறிப்பெயர்
  • நம் முன்னோர்கள் தொன்றுதொட்டு எந்தக் காரணமும் கருதாமல் ஒரு பொருளுக்கு இட்டு வழங்கிய பெயரே இடுகுறிப்பெயர்.

சான்று
  • கல், மரம், மண், மலை, காடு
 
இடுகுறிப்பெயரை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.
  • இடுகுறிப் பொதுப்பெயர்
  • இடுகுறிச் சிறப்புப்பெயர்

இடுகுறிப் பொதுப்பெயர்
  • சான்றாக மலை, காடு என்பது அனைத்து வகை மலைகளுக்கும், காடுகளுக்கும் பொதுவான பெயர். இவ்வாறு அனைத்துக்கும் பொதுவாக வரும் இடுகுறிப்பெயர்கள் இடுகுறிப் பொதுப்பெயர் எனப்படும்.

இடுகுறிச் சிறப்புப்பெயர்
  • மரம் என்னும் பொதுப்பெயர்ச்சொல் ஆலமரம், அரசமரம், வாழைமரம், தென்னைமரம் முதலான மரவகைகள் அனைத்திற்கும் இடுகுறிப் பொதுப்பெயராய் வரும்.
  • வாழைமரம் என்னும் சொல் ஒரு காரணமும் இன்றி, இடுகுறிப் பெயராய் நின்று ஒரு பொருளுக்கே (வாழைமரம்) சிறப்பாய் வருவதனால் இடுகுறிச் சிறப்புப்பெயர் என்றாயிற்று.
 
தமிழ்மொழியின் இனிய இலக்கணப் பாங்கினை வரும் வாரங்களில் அறியலாம் . .
 
தி. செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய 
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி 
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment