பக்கங்கள்

பழமொழி அறிவோம்

இதழ் - 101                                                                                                இதழ் - ௧0௧
நாள் : 31-03-2024                                                                                நாள் : ௩௧-0௩-௨௦௨௪


பழமொழி – 101

” குழந்தை காய்ச்சலும் குள்ளன் காய்ச்சலும் பொல்லாது ”
 
விளக்கம்
    குழந்தைகளுக்கு வரக்கூடிய காய்ச்சலும் குள்ளன் அல்லது குண்டனுக்கு வரக்கூடிய காய்ச்சலும் மிகவும் கொடியது என்பது இப்பழமொழிக்கு விளக்கம் என்று தவறாகப் புரிந்து கொள்கிறோம்.


 ”குழந்தை கொய்ச்சலும் குள்ளன் கொய்ச்சலும் பொல்லாது”

உண்மை விளக்கம்
    இங்கு கொய்ச்சல் என்றால் கோபம், பொறாமை, வெறுப்பு போன்ற குணங்களைக் குறிக்கிறது. இரண்டு குழந்தைகள் ஏதாவது சிறிய காரணங்களினால் மேற்கொண்ட (கொய்ச்சல்) குணங்களினால் தன்னை மாற்றிக்கொண்டால் அக்குணத்தை எளிதில் கைவிடுவதில்லை. இத்தகைய குழந்தைகள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டால் எளிதில் இணைவதுமில்லை. 

     இதேபோல் குள்ளன் அல்லது குண்டன் ஆகிய இருவரும் இதே தீய குணங்கள் தங்களிடம் இருந்தால் அவர்களின் தாழ்வு மனப்பான்மையால் மேற்கண்ட குணங்களைக் கைவிடுவதில்லை என்பதைக் குறிக்கவே “குழந்தை கொய்ச்சலும் குள்ளன் கொய்ச்சலும் பொல்லாது“ என்ற இப்பழமொழியை நம் முன்னோர்கள் பயன்படுத்தியுள்ளனர்.

     மேலும், இத்தகைய பழமொழிகளின் மூலம் நமது முன்னோர்களின் சொற்திறத்தினை வரும் வாரங்களில் காணலாம்...
 
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment