இதழ் - 199 இதழ் - ௧௯௯
நாள் : 03 / 05 / 2026 நாள் : 0௩ / 0௫ / ௨௦௨௬
பழமொழி அறிவோம்
பழமொழி – 199
' ஓடுக ஊரோடு மாறு '
விளக்கம்
ஊருடன் ஒத்து வாழ்தல் வேண்டும் என்பது இப்பழமொழியின் பொருளாகும்.
உண்மை விளக்கம்
செல்லற்க சேர்ந்தார் புலம்புறச் செல்லாது
நில்லற்க நீத்தார் நெறியொரீப் - பல்காலும்
நாடுக தான்கண்ட நுட்பத்தைக் கேளாதே
'ஓடுக ஊரோடு மாறு'.
தம்மை வந்து அடைக்கலமாகச் சேர்ந்தவர்கள் வருத்தம் அடையுமாறு ஒரு போதுமே நடக்கக் கூடாது. துறவியர்களின் தங்களின் ஒழுக்க நெறியினைப் பேணி நடக்க வேண்டும். கற்றவர்கள் தான் ஆராய்ந்து கண்ட பொருள் நுட்பத்தை அறிந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு சமூக விழுமியங்கள் எவ்வாறு உள்ளதோ அதை ஆராயாமல் அவ்வாறே கடைப்பிடிக்க வேண்டும் என்றும் ஊரோடு ஒத்து வாழ வேண்டும் என்பதையும் குறிக்கவே 'ஓடுக ஊரோடு மாறு' என்று இப்பழமொழி பொருள் உணர்த்துகிறது.
இத்தகைய பழமொழிகளின் பொருள்திறத்தினைத் தொடர்ந்து அறிவோம்…
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020

No comments:
Post a Comment