பக்கங்கள்

பழமொழி அறிவோம்

இதழ் - 24                                                                  இதழ் -
நாள் : 09-10-2022                                                     நாள் : ௦௯--௨௦௨௨

 
 
 
பழமொழி – 24
 
அள்ளில்லத்(து) உண்ட தனிசு

     உள்ளத்தில் கள்ளம் உடையவர்களுடன் கொள்ளும் நட்பானது தம் வீட்டினுள்ளேயே கடன்பட்டிருப்பது போன்ற பெரும் துன்பத்தைத் தரும் என்பது இப்பழமொழியின் பொருளாகும். (தனிசு – கடன்)

     வெள்ளம் பகையெனினும், வேறிடத்தார் செய்வதென்?
     கள்ளம் உடைத்தாகிச் சார்ந்த கழிநட்பு
     புள்ளொலிப் பொய்கைப் புனலூர! அஃதன்றோ,
     'அள்ளில்லத்(து) உண்ட தனிசு'


விளக்கம்
 
     பெரும் ஆரவாரத்தைக் கொண்ட வெள்ளம் போன்று பெரும் படையைக் கொண்ட பகைவர்கள் வேற்றிடத்தில் இருப்பின் அவர்களால் நமக்கு எத்தகைய தீங்கும் நேரப்போவதில்லை. ஆனால் நம் அருகிலேயே இருந்து, உள்ளத்தில் கள்ளம் உடைய நண்பர்களுடன் கொள்ளும் நட்பானது, தம் வீட்டினுள்ளேயே கடன்பட்டிருப்பது போன்ற பெரும் துன்பத்தைத் தரும் என்பதை  'அள்ளில்லத்(து) உண்ட தனிசு' என்று இப்பழமொழி நமக்கு பொருள் உணர்த்துகிறது.

     இத்தகைய கிராமத்துப் பழமொழிகளின் பொருள்திறத்தினைத் தொடர்ந்து வரும் வாரங்களில் அறிவோம்...
 
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020
 
 

No comments:

Post a Comment