இதழ் - 79 இதழ் - ௭௯
நாள் : 29-10-2023 நாள் : ௨௯-௧0-௨௦௨௩
பழமொழி – 79
” ஊர் இளக்காரம் வண்ணானுக்குத் தெரியும் ”
விளக்கம்
ஊரில் துணி துவைக்கும் வண்ணானுக்கு அந்த ஊரில் தன்னிடம் துணியைக் கொடுத்தவர்களின் பலவீனம் தரியும் என்பது இப்பழமொழியின் பொருளாகும்.
உண்மை விளக்கம்
கிராமங்களில் முற்காலங்களில் ஊர்மக்களின் துணிகளை வெளுப்பதற்கு அந்த ஊருக்கென வண்ணான் (துணி வெளுப்பவர்) இருப்பர். அவர்கள் வீடுவீடாகச் சென்று மக்களின் துணிகளைப் பெற்று வெளுத்துக் கொடுப்பது வழக்கம். அத்தகைய வண்ணான்களுக்குத் அந்த ஊர் மக்களின் அந்தரங்க பலவீனம் அனைத்தும் தெரியும் என்பதை உணர்தவே ஊர் இளக்காரம் வண்ணானுக்குத் தெரியும் என்ற இப்பழமொழியை நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர்.
தற்போது இந்த துணிவெளுக்கும் தொழில் அருகிவிட்டது என்று கூறலாம். ஏனெனில் இயந்திரங்களின் வரவாலும் கல்வி கற்றதன் விளைவாலும் வண்ணான் தொழில் செய்பவர்கள் தற்போது குறைந்து விட்டனர்.
மேலும், இத்தகைய பழமொழிகளின் மூலம் நமது முன்னோர்களின் சொற்திறத்தினை வரும் வாரங்களில் காணலாம்...
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment