இதழ் - 150 இதழ் - ௧௫0
நாள் : 23 - 03 - 2025 நாள் : ௨௩ - ௦௩ - ௨௦௨௫
பழமொழி அறிவோம்
பழமொழி – 148
“ ஊர்மேற்ற தாம்அமணர்க்(கு) ஓடு ”
விளக்கம்
ஓடேந்தி அமணர்கள் (சமணர்கள்) தெருவில் சென்றால் ஈகைக் குணம் கொண்டவர்கள் தாமாக முன்வந்து செல்வம் அளிப்பர் என்பது இப்பழமொழியின் பொருளாகும்.
“ ஊர்மேற்ற தாம்அமணர்க்(கு) ஓடு ”
உண்மை விளக்கம்
தாரேற்ற நீண்மார்பின் தம்இறைவன் நோக்கியக்கால்
போரேற்றும் என்பார் பொதுவாக்கல் வேண்டுமோ?
யார்மேற்றாக் கொள்ளினும் கொண்டீக காணுங்கால்
'ஊர்மேற்ற தாம்அமணர்க்(கு) ஓடு'
காட்டிலிருந்து தவமியற்றும் அமணர்கள் ஊருக்குள் ஓடேந்தி வந்தால் மக்கள் தாமாக முன்வந்து பரிசளித்துச் செல்வர். அதுபோல அரசன் ஒருவன் எதிரி நாட்டுடன் போரிட எண்ணும்போதே அந்நாட்டு வீரர்கள் அதைத் தம் கடனாக எண்ணி அரசனுக்கு வெற்றியைப் பெற்றுத் தருவர் என்பதைக் குறிக்கவே 'ஊர்மேற்ற தாம்அமணர்க்(கு) ஓடு' என்று இப்பழமொழி பொருள் உணர்த்துகிறது.
இத்தகைய பழமொழிகளின் பொருள்திறத்தினைத் தொடர்ந்து அறிவோம்…
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment