பக்கங்கள்

பழமொழி அறிவோம்

இதழ் - 23                                                                  இதழ் -
நாள் : 02-10-2022                                                     நாள் : --௨௦௨௨

 
 
 
பழமொழி – 23
 
களவும் கற்று மற

பொருள்
     ஒருவன் நல்லவை மட்டுமல்லாமல் திருட்டையும் கற்று அதை மறக்க வேண்டும் என்று நாம் இப்பழமொழிக்குப் பொருள் விளங்கிக் கொள்கிறோம்.

உண்மை விளக்கம்


களவும்; கத்தும்; மற

     களவு என்றால் திருட்டு, கத்து என்றால் பொய் என்று பொருள். ஒருவன் தன் வாழ்நாளில் திருட்டையும் பொய்யையும் அறவே மறக்க வேண்டும் என்றும், இவை இரண்டையும் தன் வாழ்நாளில் எத்தகைய சூழல் வந்தாலும் செய்யக்கூடாது என்பதே இப்பழமொழியின் பொருளாகும்.

     இதனையே களவும்; கத்தும்; மற என்று இப்பழமொழி நமக்குப் பொருள் உணா்த்துகிறது.
 
     இத்தகைய கிராமத்துப் பழமொழிகளின் பொருள்திறத்தினைத் தொடர்ந்து வரும் வாரங்களில் அறிவோம்...
 
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020 

 
 
 
 

No comments:

Post a Comment