இதழ் - 186 இதழ் - ௧௮௬
நாள் : 28 - 12 - 2025 நாள் : ௨௮ - ௧௨ - ௨௦௨௫
வஞ்சிப்படலம் (அ) வஞ்சித்திணை
வஞ்சிப்பூவினைச் சூடி மாற்றான் மண்ணைக் கவரக்கருதி படையெடுத்துச் செல்லுதல் வஞ்சித்திணை அல்லது வஞ்சிபடலம் எனப்படும்.
வஞ்சித்திணை துறைகள் மொத்தம் – 20
1. வஞ்சி அரவம்
அணிவகுத்துச் சென்ற ஆரவார ஒலியே ஆகும்.
2. குடைநிலை
வஞ்சி அரசன் நல்ல நாளில் படையெடுப்பிற்கு முன்னால் தன்னுடைய
வெண்கொற்றகுடையை எடுத்து ஊர்ச்சுற்றிச் செல்வது.
3. வாள்நிலை
நல்ல நாளில் தன்னுடைய வெற்றி வாளைப் புறவீடு விட்டது.
4. கொற்றவை நிலை
கொற்றவையின் அருளுடைமையினைப் பாராட்டி வணங்குதல் மற்றும் வஞ்சி
மறவரின் போர்த்தொழிலைப் பாராட்டுதல்.
5. கொற்றவஞ்சி
வஞ்சி அரசனின் வாள் வலிமையைச் சிறப்பித்துக் கூறுவது.
6. கொற்றவள்ளை
வஞ்சி அரசனின் வெற்றியைக் கூறி, பகை நாட்டின் அழிவிற்கு மனம் வருந்துதல்.
7. பேராண் வஞ்சி
பகை வென்ற மறவனை அரசன் பாராட்டி பரிசளித்தல், தோல்வியுற்ற பகை
அரசனிடமிருந்து திறைப்பொருட்களைப் பெற்று தன்நாட்டிற்குத் திரும்புதல்.
8. மாராய வஞ்சி
அரசனால் சிறப்பிக்கப்பட்ட மறவரின் மாண்பினைக் கூறுவது.
9. நெடுமொழி வஞ்சி
வஞ்சி மறவன் பனைவர்களின் முன்னே தன்னுடைய ஆண்மையைத்
தானே புகழ்ந்துக் கூறுவது.
10. முதுமொழிக் காஞ்சி
மறவன் ஒருவன் தான் பிறந்த குடியின் முதல்வனைப் புகழ்ந்துப் பாடுதல்.
இலக்கணம் தொடரும் . . .
திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர்- 641020

No comments:
Post a Comment