பக்கங்கள்

இலக்கணம் கற்போம்

இதழ் - 37                                                                                        இதழ் -
நாள் : 08-01-2023                                                                          நாள் : 0அ - 0 - ௨௦௨
 
 
 
காரணப்பெயர் வகைகள்
 
காரணப்பெயர்
     நம் முன்னோர்கள் காரணம் கருதி இட்டு வழங்கிய பெயர்கள் காரணப்பெயர்கள் எனப்படும். தமிழ்மொழியில் காரணப்பெயர்கள் மிகுதி.
 
சான்று
  • மிதிவண்டி
  • பறவை
  • வளையல்
  • செங்கல்
 
வகைகள்
காரணப்பெயரை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.
  •  காரணப்பொதுப்பெயர்
  •  காரணச்சிறப்புபெயர்
 
காரணப்பொதுப்பெயர்
     பறப்பதனால் பறவை என்றாயிற்று. புறா, குயில், மயில், காகம் அனைத்தையும் பறவை என்னும் பொதுச்சொல்லால் அழைக்கிறோம். அதனால் இதனைக் காரணப்பொதுப்பெயர் என்கிறோம்.

காரணச்சிறப்புபெயர்
        வளையல் என்னும் சொல் காரணச்சிறப்புப் பெயராகும். வளையல் போலவே சிலபொருள் வளைந்து வட்டமாக இருக்கும். இருப்பினும் அவையெல்லாம் வளையல் என அழைக்கப்படுவது இல்லை. இருப்பினும் இச்சொல் கையில் அணியும் வளையலை மட்டுமே குறிப்பதனால் காரணச்சிறப்புப்பெயர் ஆயிற்று

தமிழ்மொழியின் இனிய இலக்கணப் பாங்கினை வரும் வாரங்களில் அறியலாம் . .
 
தி. செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய 
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி 
கோயம்புத்தூர்-641020
 

No comments:

Post a Comment