இதழ் - 43 இதழ் - ௪௩
நாள் : 19-02-2023 நாள் : ௧௯-0௨-௨௦௨௩ நெய்தல் நிலத்தின் ஒரு பகுதியான சேர நாட்டில் சிறந்திருந்த முசிறி என்னும் பட்டினம் இரு பாகங்களாக அமைந்திருந்தது. அவற்றுள் ஊர் என்னும் பெயருடைய பாகம் கொடுங்கோளூர் எனவும், மற்றொரு பாகம் மகோதைப்பட்டினம் எனவும் வழங்கலாயின.
பாண்டிய நாட்டில் காயல்பட்டினம், குலசேகரப்பட்டினம் முதலிய கடற்கரைப்பட்டினங்கள் உள்ளன. காயல்பட்டினத்தில் இந்நாளில் மகமதியரே பெரும்பாலும் வாழ்ந்து வருவதால் சோனகர்பட்டினம் என்றும் அதனைச் சொல்வதுண்டு. உப்பு வாணிபம் அவ்வூரில் சிறப்பாக நடைபெறுகின்றது. குலசேகர பாண்டியன் பெயரைக் கொண்டு விளங்கும் ஊர்களில் ஒன்று குலசேகரப்பட்டினமாகும்.
சோழ மண்டலக்கரையில் சதுரங்கப்பட்டினம் என்னும் சிறிய துறைமுகம் உள்ளது. அது பாலாறு கடலிற் சேருமிடத்திற்குச் சிறிது வடக்கே அமைந்திருக்கின்றது. சதுரை என்பது அவ்வூர்ப் பெயரின் குறுக்கம். அதனை ஐரோப்பியர்கள் சதுராஸ் என்று வழங்கினார்கள்.
இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
No comments:
Post a Comment