பக்கங்கள்

இலக்கணம் கற்போம்

இதழ் - 149                                                                                        இதழ் - ௧
நாள் : 16 - 03 - 2025                                                                      நாள் : ௬  - ௨௦௨



விடை

வினா எதிர் வினாதல் விடை
  • கேட்கப்படும் வினாவிற்கு விடையாக இன்னொரு வினாவைக் கேட்பது வினா எதிர் வினாதல் விடை ஆகும்.
சான்று
  • 'என்னுடன் ஊருக்கு வருவாயா?' என்ற வினாவிற்கு 'வராமல் இருப்பேனா?' என்று கூறுவது.


உற்றது உரைத்தல் விடை
  • கேட்கப்படும் வினாவிற்கு விடையாக ஏற்கனவே நேர்ந்ததைக் கூறல் உற்றது உரைத்தல் விடை ஆகும்.
சான்று
  • 'நீ விளையாடவில்லையா?' என்ற வினாவிற்கு 'கால் வலிக்கிறது' என்று உற்றதை உரைப்பது.


திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய 
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி 
கோயம்புத்தூர்- 641020

No comments:

Post a Comment