பக்கங்கள்

தமிழக ஊர்களின் இன்றைய பெயரும் அன்றைய பெயரும்

இதழ் - 47                                                                                          இதழ் -
நாள் : 19-03-2023                                                                            நாள் : -0-௨௦௨௩
 
 
 
தலைநகரங்கள்
 
     வாழ்வும் தாழ்வும் நாடு நகரங்களுக்கும் உண்டு. பண்டைய நாளில் சீரும் சிறப்பும் உற்று விளங்கிய சில நகரங்கள் இக்காலத்தில் புகை படிந்த ஓவியம்போல் பொலிவிழந்து காணப்படுகின்றன. பின்னாளில் தோன்றிய சில ஊர்கள் இப்பொழுது பெருமையுற்றுத் திகழ்கின்றன. இந்த உண்மையைச் சான்றுகளால் அறியலாம்.
 
உறந்தை
    சங்ககாலம் சோழ நாட்டின் சிறந்த வளமிகுந்த நகரம் உறந்தையாகும். உறையூர் காவிரி யாற்றங்கரையில் அமைந்திருந்தது. 'ஊர் என்று சொல்லப்படுவது உறையூர்' என புலவர்கள் அதனைப் பாராட்டினர். திருச்சிராப்பள்ளி ஒரு சிற்றூராக அதன் அந்நாளில் அண்மையில் அமர்ந்திருந்தது.
 
    நாளடைவில் உறையூரின் பெருமை குறைந்தது. சிராப்பள்ளியின் சீர் ஓங்கிற்று. இப்பொழுது திருச்சிராப்பள்ளி தமிழ்நாட்டில் ஒரு சிறந்த நகரமாகத் தலையெடுத்து நிற்கின்றது. பண்டையப் பெருமை வாய்ந்த உறையூர் அதன் அருகே ஒளி மழுங்கி பொலிவிழந்து ஒடுங்கிக் கிடக்கின்றது.
 
இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .
 
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment