இதழ் - 11 இதழ் - ௧௧
நாள் : 10-07-2022 நாள் : ௧௦-௦௭ - ௨௦௨௨

முற்றியலுகரம்
குற்றியலுகர எழுத்துகளான கு, சு, டு, து, பு, று என்னும் எழுத்துகள் தனிக்குறிலை அடுத்து வந்தால் அவற்றின் ஓசை குறைவதில்லை. எனவே, அவற்றை முற்றியலுகரம் என்கிறோம்.
சான்று : பசு , எது , மறு
இறுதியில் குற்றியலுகர எழுத்துகள் வந்தாலும் முதல் எழுத்து குறில் எழுத்தாக இருப்பதால் இவை குற்றியலுகரம் அல்ல.
அணு, இரவு, ஓய்வு, ஏழு
மேலே குறிப்பிட்டுள்ள சொற்களின் இறுதியில் மெல்லின, இடையின மெய்யெழுத்துகள் சேர்ந்து வந்துள்ளன. ஆனால் அவை குறைந்து ஒலிப்பதில்லை. எனவே, அவை குற்றியலுகரம் அல்ல. ஒரு சொல்லின் இறுதியில் உள்ள உகரம் குறைந்து ஒலிக்காமல் முழு அளவில் ஒலிக்குமாயின் அது முற்றியலுகரம் எனப்படும்.
ஒரு சொல்லின் இறுதியில் வரும் உகரம் முற்றியலுகரமாகவோ அல்லது குற்றியலுகரமாகவோ இருக்கும். உகரம் சொல்லின் முதலிலும், இடையிலும் வரும்பொழுது முழுமையாக ஒலிக்கும்.

( தொடர்ந்து கற்போம் . . . )
தி.செ.மகேஸ்வரி
தமிழாசிரியர்ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர் – 641020.
No comments:
Post a Comment