பக்கங்கள்

இலக்கணம் கற்போம்

இதழ் - 191                                                                                   இதழ் - ௧
நாள்  :  15 / 02 / 2026                                                             நாள்   :   / 0 / ௨௦௨


இலக்கணம் கற்போம்
 
உழிஞைப் படலம்

உழிஞைப் படலம்: 

14.  பாசிநிலை:
    உழிஞையார் அகழிக்கரையில் நொச்சியாரின் வலிமைக் கெடப் போர்புரிவது.

15.  ஏணிநிலை: 
    உழிஞை மறவர்கள் நொச்சியாளாரின் மதில்மேல் ஏணியைச் சாத்தியது.

16.  எயிற்பாசி: 
    உழிஞையார் ஏணி மீது ஏறிச்செல்லும் நிலை.

17.  முதுஉழிஞை: 
    உழிஞையார் பகைவருடைய மதிலின்மீது குதித்தல் மற்றும் உழிஞை ஒற்றன்
    பகைவர் நிலையை அறிவித்தல்.

18.  அகத்து உழிஞை: 
    மதிலின் அகத்து உழிஞையார் நொச்சியாரை வென்றது.

19.  முற்றுமுதிர்வு: 
    நொச்சி வேந்தனின் முரசினது ஒலிகேட்டு உழிஞை வேந்தன் மிகுந்த சினம் கொள்வது

20.  யானை கைக்கோள்: 
     நொச்சியாரின் யானைகளை உழிஞை மறவர்கள் கைப் பற்றுவது.

21.  வேற்றுப்படை வரவு: 
    நொச்சியரசனுக்குத் துணை செய்ய வேற்றரசன் வருவது. 

22.  உழுது வித்திடுதல்: 
     நொச்சியாரின் அரணை அழித்து, கழுதைப் பூட்டி உழுது கவடி 
     (உண்ணாவரகு) விதைப்பது.

23.  வாள்மண்ணுநிலை: 
     உழிஞை வேந்தனின் வெற்றி வாளைப் புனித நீராட்டுவது.

24.  மண்ணுமங்கலம்: 
     வெற்றிப்பெற்ற உழிஞை வேந்தன் தன்னை மண மகனாக ஒப்பனைச் செய்வது.

25.  மகட்பால் இகல்: 
     நொச்சியாரின் மகளை விரும்பி உழிஞை அரசன் மதில் புறத்தில் தங்கியிருத்தல்.

26.  திறைகொண்டு பெயர்தல்: 
     நொச்சி வேந்தனிடமிருந்து திறைப் பொருளைப் பெற்று உழிஞையரசன் தன் 
     நாட்டிற்குத் திரும்புதல்.

27.  அடிப்பட இருத்தல்: 
     பகைவர் நாடு தன் கீழ் அடிமைப்பட்டு இருப்பதற்காகப் பாசறைக்கண் தங்கியிருப்பது.

28. தொகைநிலை: 
    உழிஞை வேந்தனின் ஆற்றலைக் கண்ட பகை வேந்தர்கள் பலரும் அவனிடம் 
    தஞ்சம் புகுவது.

இலக்கணம் தொடரும் . . .

திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய 
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி 
கோயம்புத்தூர்- 641020

No comments:

Post a Comment