பக்கங்கள்

இலக்கணம் கற்போம்

இதழ் - 189                                                                                        இதழ் - ௧
நாள்   : 01 / 02 / 2026                                                                   நாள்   :  0௧ / 0 / ௨௦௨


இலக்கணம் கற்போம்
 

வஞ்சித்திணை

காஞ்சிப்படலம்

    தன்நாட்டைக் கவருவதற்காகப் பகையரசன் (வஞ்சியரசன்) படையெடுத்து வருவதை அறிந்தான் ஒரு வேந்தன். அப்படைகள் தம் நாட்டிற்குள் வராமல் தடுக்கும் பொருட்டுக் காஞ்சி மறவர்கள் காஞ்சிப் பூவினைச் சூடிக்கொண்டு தம் எல்லையில் நின்று தடுத்துப் போர்ப்புரிவது காஞ்சித்திணை எனப்படும்..

காஞ்சித்திணை துறைகள் மொத்தம்  – 21

11.   தலையோடு முடிதல்: 
    இறந்த தலைவனின் தலையைக் கண்டு அவனுடைய மனைவி இறந்துபடுவதே ஆகும்.

12.  மறக்காஞ்சி: 
    வஞ்சி மறவர்கள் அஞ்சும்படியாகப் போர்செய்தல் மற்றும் ஒரு மறவன் தன்னுடையப் 
    புண்ணைத் தானே கிழித்துக் கொண்டு உயிர் விடுதல்.

13.  பேய்நிலை: 
     புண்பட்டு இறந்த மறவனைப் பேய் காவல் காப்பது.

14.  பேய்க்காஞ்சி: 
    புண்பட்டுக் கிடப்பவனைப் பேய் அச்சுறுத்துவது.

15.  தொட்டகாஞ்சி: 
    மறவனின் புண்ணைப் பேய் தீண்டுவது.

16.  தொடாக்காஞ்சி: 
     மறவனின் புண்ணைத் தீண்டப் பேய் அஞ்சுவது.

17.  மன்னைக்காஞ்சி: 
    இறந்த மறவனின் புகழைப் பாராட்டி மனம் வருந்துவது.

18.  கட்காஞ்சி: 
    காஞ்சி வேந்தன் தன் வீரருக்குக் கள்ளினை வழங்கியது.

19.  ஆஞ்சிக்காஞ்சி: 
    கணவனின் இறப்பிற்குப் பின்னர் அவனுடைய மனைவி வாழ அஞ்சுவது மற்றும் 
    போரில் இறந்த கணவனுடன் மனைவியும் உயிர்விடுதல் மற்றும் கணவனை 
    அழித்தக் கருவியால் தன்னைத்தானே மாய்த்துக் கொண்டு உயிர்விடுதல்.

20. மகட்பாற்காஞ்சி: 
    தன் மகளைக் கேட்கும் வஞ்சியரசனோடு காஞ்சியரசன் மாறுபட்டு நிற்பது.

21.  முனைகடி முன்னிருப்பு: 
    காஞ்சி வேந்தன் வஞ்சியரசனின் படையைப் புறமுதுகிட்டு ஓடச் செய்வது.


 இலக்கணம் தொடரும் . . .

திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய 
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி 
கோயம்புத்தூர்- 641020

No comments:

Post a Comment