பக்கங்கள்

பழமொழி அறிவோம்

இதழ் - 168                                                                                 இதழ் - ௧
நாள் : 03 - 08 - 2025                                                             நாள் : ௩  - ௨௦௨


பழமொழி அறிவோம்

பழமொழி – 168

எளியாரை எள்ளாதார் இல் '

விளக்கம்
    போர் வலிமையற்ற அரசன் ஒருவன் எளிமையாக இருந்தாலும் அவனை யாரும் மதிக்க மாட்டார்கள் என்பது இப்பழமொழியின் பொருளாகும்.
     
உண்மை விளக்கம்

         ஒளியாரை மீதூர்ந்து ஒழுகுவது அல்லால்
         களியானை மன்னர்க்கோ கைகடத்தல் ஏதம்
         துளியுண் பறவைபோல் செவ்வன்நோற் பாரும்
         எளியாரை எள்ளாதார் இல்'.

     இதில், அரசர்கள் எப்படி இருக்க வேண்டும், மக்களை எப்படி நடத்த வேண்டும் என்பதற்கான அறிவுரைகள் கூறப்பட்டுள்ளன. குறிப்பாக, அரசர்கள் வலிமை இல்லாதவர்களாக இருந்தாலும், நல்லவர்களாக இருந்தால் மட்டும் போதாது, மக்களை அரவணைத்துச் செல்ல வேண்டும் என்பதையும், எளியவர்களை இகழக்கூடாது என்பதையும் வலியுறுத்துகிறது

இத்தகைய பழமொழிகளின் பொருள்திறத்தினைத் தொடர்ந்து அறிவோம்…

முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment