இதழ் - 150 இதழ் - ௧௫0
நாள் : 23 - 03 - 2025 நாள் : ௨௩ - ௦௩ - ௨௦௨௫
கபிலர் சங்க காலத்து தமிழ்ப் புலவர்களில் குறிப்பிடத்தக்கவர்.இ வர் சங்க இலக்கியப் பாடல்களுள் மிக அதிக எண்ணிக்கையில் பாடல்களை இயற்றியவர். குறிஞ்சித் திணை பற்றிப் பாடுவதில் தேர்ந்தவர். கலித்தொகையில் குறிஞ்சிக் கலி, பத்துப் பாட்டில் குறிஞ்சிப் பாட்டு, ஐங்குறு நூற்றில் குறிஞ்சித் திணை பற்றிய நூறு பாடல்களைப் பாடியதோடு, இத்திணை பற்றி அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகிய நூல்களிலும் மிகுதியான பாடல்களைப் பாடியுள்ளதால் குறிஞ்சி பாடிய கபிலர் என்றே இவரைக் கூறலாம்.
கபிலர் பாரிக்கு நெருக்கமான நண்பராகவும் பாரியின் அமைச்சராகவும் பறம்புமலையில் வாழ்ந்தார் என்று பாடல் குறிப்புகள் காட்டுகின்றன. வேள்பாரிக்குப் பின் அவரின் மகள்களான அங்கவை, சங்கவை இருவருரையும் விச்சிகோன், இருங்கோவேள் என்ற இரண்டு அரசர்களுக்கு மணம் முடித்து வைக்க முயன்றார். (சான்று, புறநானூறு 200,201 )
பாரியின் இறப்பைத் தாங்க முடியாது, கபிலர் வடக்கிருந்து உயிர் துறந்தார். கபிலர் உயிர்விட்டதாக கருதப்படும் இடத்தில் அமைந்துள்ள குன்று.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோயிலூர் வட்டத்தில் கபிலர் குன்று உள்ளது. இங்கு கபிலர் உயிர்துறந்தார் என்றும், கபிலக்கல் என்னும் பாறை அவர் நினைவாக உள்ளது என்றும் கல்வெட்டுச்செய்தி ஒன்று உள்ளது.
வரும் கிழமையும் கபிலர் வருவார் . . .
சாந்தி மகாலிங்கசிவம்
முனைவர் பட்ட ஆய்வாளர்
தமிழ்த்துறை
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் - 641020
No comments:
Post a Comment