பக்கங்கள்

இலக்கணம் கற்போம்

 
இதழ் - 59                                                                                           இதழ் -
நாள் : 11-06-2023                                                                              நாள் : -0-௨௦௨௩
 
    
பெயரெச்சம் – வகைகள்
   பெயரெச்சம் தெரிநிலை பெயரெச்சம், குறிப்புப் பெயரெச்சம் என இருவகைப்படும்.
 
தெரிநிலைப் பெயரெச்சம்
     வந்த பையன் - வந்த பையன் என்ற இத்தொடரிலுள்ள வந்த என்னும் சொல் வருதல் என்னும் செயலையும் இறந்த காலத்தையும் தெளிவாகக் காட்டுகிறது. இவ்வாறு செயலையும் காலத்தையும் வெளிப்படையாகத் தெரியுமாறு காட்டும் பெயரெச்சம் தெரிநிலைப் பெயரெச்சம் எனப்படும்.
 
குறிப்புப் பெயரெசசம்  
     சிறிய கடிதம் - சிறிய கடிதம் என்ற இத்தொடரிலுள்ள சிறிய என்னும் சொல்லின் செயலையோ காலத்தையோ அறிய முடியவில்லை. பண்பினை மட்டும் குறிப்பாக அறிய முடிகிறது. இவ்வாறு செயலையோ காலத்தையோ தெளிவாகக் காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பாகக் காட்டும் பெயரெச்சம் குறிப்பு பெயரெச்சம் எனப்படும்
 
அறிந்த பெண் - இதில் அறிந்த என்பது உடன்பாட்டுப் பெயரெச்சம்.
அறியாத பெண் -  இதில் அறியாத என்பது எதிர்மறைப் பெயரெச்சம். அறியாப் பெண் - இத்தொடரிலிருக்கும் அறியா என்பது ஈறு கெட்டு
வந்திருக்கிறது. ஆதலால், இதனை ஈறுகட்ட எதிர்மறைப் பெயரெச்சம் என்பர்.  ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின் பின் வல்லினம் மிகும்.
 
சான்று
     இல்லாப் பொருள், அறியாச் சிறுவன்.
     ஈறு கெடாத பெயரெச்சத்தின் பின் வல்லெழுத்து மிகாது.
     அறியாத சிறுவன், இல்லாத பொருள். 

    இவ்வாறு தமிழ்மொழியின் இனிய இலக்கணப் பாங்கினை வரும் வாரங்களில் மேலும் அறியலாம்.
 
 
தி. செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய 
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி 
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment