பக்கங்கள்

பழமொழி அறிவோம்

இதழ் - 139                                                                                  இதழ் - ௧௩
நாள் : 22 - 12 - 2024                                                                நாள் :  - ௧௨ - ௨௦௨௪



பழமொழி அறிவோம்

பழமொழி – 139

“ கொழுக்கட்டை தின்ற நாய்க்கு 
குருணி மோர் குருதட்சினையா? 

விளக்கம்

கொழுக்கட்டை அதிமாகத் தின்ற நாய்க்கு சீரணிக்க மோர் குருதட்சினையாகக் கொடுக்கிறோம் என்று இப்பழமொழிக்குப் பொருள் விளங்கிக் கொள்கிறோம்.

உண்மை விளக்கம்

இங்கு குறுணி என்பது எட்டு படிகொண்ட முகத்தல் அளவையைக் குறிக்கும்.

கொழுக்கட்டை தின்ற நாய்க்கு மோர் தட்சினையைாகக் கொடுப்பதை இந்தப் பழமொழி குறிப்புணர்த்தியிருந்தாலும் இப்பழமொழி திருடனைக் குறிக்க பயன்படுத்தியதாகும். 

குற்றம் செய்த ஒருவன் தன் தவறை மறைத்து நியாயப்படுத்திப் பேசுவதும் அவனை மற்றவர்கள் பாராட்டிப் பேசுவதும் சில இடங்களில் நடப்பதைக் காணலாம். 

அவனே ஓர் திருடன் அவன் திருட்டை மறைக்க தட்சினை வேறு கொடுக்குறீர்களா என்று கண்டிக்கவே “கொழுக்கட்டை தின்ற நாய்க்கு குருணி மோர் குருதட்சினையா?” என்ற இப்பழமொழியை நம் முன்னோர்கள் பயன்படுத்தியுள்ளனர்.

இத்தகைய பழமொழிகளின் பொருள்திறத்தினைத் தொடர்ந்து அறிவோம்…

முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment