இதழ் - 145 இதழ் - ௧௪௫
நாள் : 16 - 02 - 2025 நாள் : ௧௬ - ௦௨ - ௨௦௨௫
கோயம்புத்தூருக்கு அண்மையில் வள்ளலூர் என்னும் அழகிய பெயருடைய ஊர் ஒன்று உள்ளது. அங்குள்ள சிவன் கோவிலுக்குத் தேனீச்சுரம் என்பது பெயர். உலகளந்த பெருமாள் கோவிலும் அங்குண்டு. பழைய பேரூர் நாட்டைச் சேர்ந்த இவ்வள்ளலூர் அன்னதான சிவபுரி எனவும் வழங்கிற்று. எனவே, அன்னதானத்தால் அழியாப் புகழ் பெற்ற வள்ளல் ஒருவரது ஞாபகச் சின்னமாக இவ்வூர் விளங்குகின்றது என்று கூறலாகும். இந்நாளில் இவ்வூரின் பெயர் வெள்ளலூர் என மருவியுள்ளது.
இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர்
துறைத்தலைவர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
No comments:
Post a Comment