பக்கங்கள்

தமிழ்ச்சொல் தெளிவோம்

இதழ் - 31                                                                இதழ் -
நாள் : 27-11-2022                                                   நாள் : ௨௭ - ௧௧ - ௨௦௨௨
 
       
 
  தமிழ்ச்சொல் தெளிவோம்
 

  • பிற உயிர்களுக்கு அன்பைத் தாராளமாக வழங்குங்கள்.
  • பிற உயிர்களுக்கு அன்பை மிகுதியாக வழங்குங்கள்.
  • நம்பியவர்களுக்கு துரோகம் இழைப்பது தீய செயலாகும்.
  • நம்பியவர்களுக்கு இரண்டகம் செய்வது தீய செயலாகும்.
  • துஷ்டனைக் கண்டால் தூரவிலகு என்பது பழமொழி.
  • தீயவனைக் கண்டால் விலகிப் போய்விடு என்பது பழமொழி.
  • தபால்துறையில் பல புதிய திட்டங்கள் நடைமுறையில் உள்ளன.
  • அஞ்சல்துறையில் பல புதிய திட்டங்கள் நடைமுறையில் உள்ளன.
  • தகராறு செய்வது நல்ல பழக்கம் அல்ல.
  • சச்சரவு செய்வது நல்ல பழக்கம் அல்ல.

     மேலும் வரும் வாரங்களில் தமிழ்மொழியில் வேறுமொழிகளின் சொற்கலப்பினை பிரித்துணர்ந்து அறிவோம்...
 
சாந்தி மகாலிங்கசிவம்
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய 
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி 
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment