பக்கங்கள்

பழமொழி அறிவோம்

இதழ் - 22                                                                   இதழ் - ௨௨
நாள் : 25-09-2022                                                     நாள் : ௨௫-௦௯- ௨௦௨௨

 
 
பழமொழி – 22
 
 'குளநெடிது கொண்டது நீர்?'

     நெடுங்காலமாக வற்றாமல் நீர் நிறைந்திருக்கின்ற ஒரு குளத்தில் ஒருவர் சற்று நீர் எடுத்துச் சென்றால் அக்குளத்தின் நீர் குறையாது என்பது இப்பழமொழியின் பொருளாகும்.

     பல்லாண்டும் ஈண்டிப் பழுதாய்க் கிடந்தது
     வல்லான் தெரிந்து வழங்குங்கால் - வல்லே
     வலிநெடிது கொண்ட(து) அறாஅது அறுமோ
     'குளநெடிது கொண்டது நீர்?'.


     ஒருவன் பல ஆண்டுகள் தான் சேர்த்து வைத்த செல்வத்தினை, செல்வம் இல்லாதோருக்குத் தக்க காலத்தில் கொடுத்து உதவினால் அச்செல்வத்தின் பயன் ஓங்கும். நெடுங்காலமாக வற்றாமல் நீர் நிறைந்திருக்கின்ற ஒரு குளத்தில் ஒருவர் சற்று நீர் எடுத்துச் சென்றால் அக்குளத்தின் நீர் எவ்வாறு குறையாதோ, அதைப் போல பண்பாளன் ஒருவன் சேர்த்து வைத்த செல்வமானது எக்காலத்திலும் குறையாது என்று 'குளநெடிது கொண்டது நீர்?' என்ற இப்பழமொழி நமக்குப் பொருள் உணர்த்துகிறது.


     இத்தகைய கிராமத்துப் பழமொழிகளின் பொருள்திறத்தினைத் தொடர்ந்து வரும் வாரங்களில் அறிவோம்...
 
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment