இதழ் - 110 இதழ் - ௧௧0
நாள் : 02-06-2024 நாள் : 0௨-0௬-௨௦௨௪
ணகர, னகர ஈறு
ணகரம் - டகரமாதல்
- வேற்றுமைப் புணர்ச்சியில்
நிலைமொழியீற்று 'ண' கரம் வல்லின முதன் மொழியோடு புணரும்போது 'ட' கரமாகத் திரியும்.
இயல்பும் ஆகும் வேற்றுமைக் கல்வழிக்
கனைத்துமெய் வரினும் இயல்பா கும்மே "
– நன்னூல், நூற்பா. எண்.209
சான்று
மண் + கலம் = மட்கலம் (ணகரம் டகரமாதல்)
னகர ஈறு - னகரம் றகரமாதல்
- நிலைமொழியீற்று 'ன' கரம் வல்லினம் வருமொழியோடு புணரும் போது 'ற' கரமாகத் திரியும்.
சான்று
பொன் + குடம் = பொற்குடம் (னகரம் றகரமாதல்)
தமிழ்மொழியின் இனிய இலக்கணப் பாங்கினை வரும் வாரங்களில் மேலும் அறியலாம்...
திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment