பக்கங்கள்

தமிழக ஊர்களின் இன்றைய பெயரும் அன்றைய பெயரும்

இதழ் - 181                                                                                இதழ் - ௧
நாள் : 09 - 1 1 - 2025                                                             நாள் :    - ௨௦௨

 



சான்றோர் பெயரால் எழுந்த ஊர்கள்


திருக்காரைக்காடு

     காஞ்சி மாநகரின் ஒரு பக்கம் காரைச் செடிகள் நிறைந்த கானகத்தில் ஒரு நறுமலர்ப் பொய்கையின் அருகே ஈசன் திருக்கோயில் எழுந்தது.

"தேர்ஊரும் நெடுவீதிச் செழுங்கச்சி மாநகர்வாய்
நீர்ஊரும் மலர்ப்பொய்கை நெரிக்காரைக் காட்டாரே"
என்ற தேவாரத் திருப்பாட்டில், அந்நகர வீதியின் அழகும், நன்னீர்ப் பொய்கையின் நீர்மையும் நன்கு காட்டப்பட்டுள்ளன. அப்பொய்கை இப்பொழுது வேப்பங்குளம் என்னும் பெயரோடு திருக்கோயிலுக்குத் தெற்கே நின்று நிலவுகின்றது.


ஆலம்பொழில்

    ஆல மரங்கள் நிறைந்த சோலையும் அரனார்க்கு உறைவிடமாயிற்று. தென்பரம்பைக்குடி என்னும் ஊரின் அருகே நின்ற ஆலம் பொழிலில் அமர்ந்தருளிய ஈசனைப் பாடினார் திருநாவுக்கரசர்.

"திருவானைத் தென்பரம்பைக் குடியின் மேய 
  திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே"
என்பது அவர் திருவாக்கு. எனவே ஆலமர் கடவுளாகிய ஈசன் அமர்ந்தருளும் இத்தலத்திற்கு ஆலம்பொழில் என்று பெயர் வழங்கலாயிற்று.


இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .

முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர் 
துறைத்தலைவர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment