நாள் : 05-11-2023 நாள் : 0௫-௧௧-௨௦௨௩
பழமொழி – 80
” இளைதென்று பாம்பிகழ்வார் இல் ”
விளக்கம்
பாம்பு சிறிதாக இருப்பினும் அதைச் சிறியதென இகழமாட்டார். ஏனெனில் பாம்பு சிதெனினும் அதன் விஷம் கொடியது என்பது இப்பழமொழியின் பொருளாகும்.
சீர்த்தகு மன்னர் சிறந்ததனைத்தும் கெட்டாலும்
நேர்த்துரைத்(து) எள்ளார் நிலைநோக்கிச் - சீர்த்த
கிளையின்றிப் போஒய்த் தனித்தாயக் கண்ணும்
'இளைதென்று பாம்பிகழ்வார் இல்'
விளக்கம்
சிறந்த தகுதிகளைக் கொண்ட அரசன் ஒருவன் தனக்கு எத்தகைய இடர்கள் வந்தாலும் தன் உயர்வான நிலையிலிருந்து தாழ்ந்து போகமாட்டான். இடர்கள் வந்த காலத்தில் செய்யத் துணியும் செயல்கள் தவறாக முடிந்தாலும் அவன் செய்த உயா்ந்த செயல்கள் மக்கள் மத்தியில் அவனை உயர்த்தும் என்பதை குறிப்பால் உணர்த்தவே, 'இளைதென்று பாம்பிகழ்வார் இல்' என்ற இப்பழமொழியில் பாம்பு சிறிதாக இருப்பினும் அதைச் சிறியதென இகழமாட்டார் என்று இப்பழமொழி நமக்குப் பொருள் உணர்த்துகிறது.
மேலும், இத்தகைய பழமொழிகளின் மூலம் நமது முன்னோர்களின் சொற்திறத்தினை வரும் வாரங்களில் காணலாம்...
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment