பக்கங்கள்

பழமொழி அறிவோம்

இதழ் - 66                                                                                            இதழ் -
நாள் : 30-07-2023                                                                             நாள் : 0-0-௨௦௨௩
 
   
 
பழமொழி – 66

” இல்லையே உய்வதற்(கு) உய்யா இடம்
 
விளக்கம்
 
    ஒருவன் தன் நண்பர்கள் கைவிட்டாலும் உழைத்துப்பிழைக்கும் திறன் இருந்தால் அவனுக்கு எவ்விதமான ஆபத்தும் வராது என்பது இப்பழமொழியின் பொருளாகும்.
 
    குரைத்துக் கொளப்பட்டார் கோளிழுக்குப் பட்டுப்
    புரைத்தெழுந்து போகினும் போவர் - அரக்கில்லுள்
    பொய்யற்ற ஐவரும் போயினார் 'இல்லையே
    உய்வதற்(கு) உய்யா இடம்'.
 
     ஒருவன் நண்பனாக நடித்துத் தன்னுடனே இருந்தாலும் அவர்களின் எண்ணம் தவறுதலாகத்தான் இருக்கும். அத்தகையோர் உடன் இல்லாவிட்டாலும் தனக்குத் திறமை இருப்பின் எத்தகைய ஆபத்தும் நேராது.  

     இது அரக்கு மாளிகையினுள் இடப்பட்ட ஐவராகிய பாண்டவர்கள் எவ்வாறு இறந்துவிடாமல் தப்பிப் போய்விட்டார்களோ அதைப்போன்று உழைத்துப் பிழைக்கும் திறன் கொண்ட ஒருவனுக்கு எத்தகைய ஆபத்தும் நேராது என்பதையே 'இல்லையே உய்வதற்(கு) உய்யா இடம்' என்ற இப்பழமொழி  பொருள் உணர்த்துகிறது.
 
    மேலும், இத்தகைய பழமொழிகளின் மூலம் நமது முன்னோர்களின் சொற்திறத்தினை வரும் வாரங்களில் காணலாம்...

முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment