இதழ் - 159 இதழ் - ௧௫௯
நாள் : 01 - 06 - 2025 நாள் : ௦௧ - ௦௬ - ௨௦௨௫
தாப்பிசைப்பொருள்கோள்
ஒரு செய்யுளின் நடுவில் நிற்கும் சொல் ஊஞ்சல் போல் முன்னும் பின்னும் சென்று சேர்ந்து பொருள் தரும் முறையைத் தாப்பிசைப் பொருள்கோள் எனக் கூறுவர்.
தாம்பு + இசை = தாம்பிசை ஆகும். தாம்பு என்பதற்குக் கயிறு என்பது பொருள். இசை என்பதற்கு சொல் என்று பொருள். இங்கு தாம்பு என்னும் சொல் தாப்பு என மாறி வந்துள்ளது. தாம்பு என்ற சொல் ஊஞ்சல் எனப் பொருள்படுகிறது.
சான்று
உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு.”
இக்குறளில் சொற்கள் அமைந்துள்ளவாறு பொருள் கொண்டால், ‘உணவு உண்ணாமல் ஒருவன் இருந்தால் உயிர் நிலைக்கும்’ என முதல் தொடர் பொருள்படும். இக்குறளின் நடுவில் உள்ள ஊண் என்னும் சொல்லை இக்குறளின் முன்னும் பின்னும் சேர்த்துப் பொருள் கொள்ள வேண்டும். அதாவது ‘ஊன் உண்ணாமை உள்ளது உயிர்நிலை; ஊன் உண்ண அண்ணாத்தல் செய்யாது அளறு’ எனப் பொருள் கொள்வது குறளின் நோக்கத்திற்கு ஏற்ற பொருள் கொள்வதாக அமையும்.
“இடைநிலை மொழியே ஏனைஈர் இடத்தும் நடந்து
பொருளை நண்ணுதல் தாப்பிசை”
- நன்னூல் நூற்பா எண். 416
திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர்- 641020
No comments:
Post a Comment