இலக்கண முறைப்படி சொல் நான்கு வகையாக பிரிக்கப்படுகிறது.
அவை,
• பெயர்ச்சொல்
• வினைச்சொல்
• இடைச்சொல்
• உரிச்சொல் ஆகும்.
பெயர்ச்சொல்
அவை,
• பெயர்ச்சொல்
• வினைச்சொல்
• இடைச்சொல்
• உரிச்சொல் ஆகும்.
பெயர்ச்சொல்
- பெயர்ச்சொல் என்பது ஒன்றன் பெயரை உணர்த்தும் சொல் ஆகும்.
- பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் ஆறின் அடிப்படையில் பெயர்ச்சொற்கள் தோன்றும்.
- பெயர்ச்சொல் ஆறு வகைப்படும்.
- பொருட் பெயர்
- இடப் பெயர்
- காலப் பெயர்
- சினைப் பெயர்
- பண்புப் பெயர்
- தொழிற் பெயர்
பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்பவற்றைப் பொருளாதி ஆறு என்றும், பொருள் முதலாறு என்றும் கூறுவர்.
“இடுகுறி காரண மரபோடு ஆக்கம்
தொடர்ந்து தொழில்அல காலம் தோற்றா
வேற்றுமைக்கு இடனாய்த் திணைபால் இடத்து ஒன்று
ஏற்பதுவும் பொதுவும் ஆவன பெயரே”
- நன்னூல். நுற்பா. எண். 275
சான்று
- பொருட்பெயர் : மனிதன், கடவுள், விலங்கு, பசு, புத்தகம்
- இடப்பெயர் : சென்னை, தமிழகம், நாடு, ஊர், இந்தியா
- காலப்பெயர் : மணி, நாள், மாதம், ஆண்டு, நாழிகை
- சினைப்பெயர் : கண், கை, தலை, பூ, கிளை
- பண்புப்பெயர் : இனிமை, நீலம், நீளம், சதுரம், கரியன்
- தொழிற்பெயர் : ஓடுதல், ஆடுதல், பாடுதல், உண்ணல், உறங்குதல்
தமிழ்மொழியின் இனிய இலக்கணப் பாங்கினை வரும் வாரங்களில் அறியலாம் . .
தி. செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment