பக்கங்கள்

தமிழக ஊர்களின் இன்றைய பெயரும் அன்றைய பெயரும்

 

இதழ் - 11                                                                    இதழ் -
நாள் : 10-07-2022                                                      நாள் : ௧௦-௦௭ - ௨௦௨௨
 
   
 
 
1. மயிலாடுதுறை – மயூரபுரம்


    பார்வதி தேவியார் மயிலாக வடிவம் எடுத்து காவிரி ஆற்றுத்துறையில் ஆடி மாயூரநாத சுவாமியான சிவபெருமானை வழிபட்டதால் இப்பகுதி மயிலாடுதுறை எனப்பட்டது. 18ஆம் நூற்றாண்டு வரை ‘மயூரபுரம்’ என்றும் பின்பு ‘மாயவரம்’ என்றும் அழைக்கப்பட்டு வந்தது. 1982இல் திரு.எம்.ஜி.ஆர் அவர்கள் முதல்வராக இருந்தபோது இந்நகரம் ‘மயிலாடுதுறை’ என அரசாணையில் பெயர் மாற்றம் செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.


2. அரியலூர் - விஷ்ணுபுரம்

 
 
    விஷ்ணுபகவானின் பெயரால் இப்பகுதி விஷ்ணுபுரம் என பெயர் பெற்றது எனக் கூறப்படுகிறது. அக்கடவுளின் மற்றொரு பெயரான ஹரி என்ற பெயரை மாற்றி ஹரியலூர் என்று வழங்கினர். அப்பெயரே காலப்போக்கில் அரியலூர் ஆக மாறியது.
 
    அரி + இல் + ஊர் = அரியிலூர். அரி - விஷ்ணு, இல் - உறைவிடம், ஊர் - பகுதி. விஷ்ணு பகவான் உறைவிடம் கொண்ட பகுதி என்பதன் சுருக்கமே அரியலூர் என வழங்கப்பட்டு வருகிறது.


3. பெரம்பலூர் – பிரம்பலூ
ர் 
 
 
    முன்பு ஒரு காலத்தில் இப்பகுதியில் பிரம்பு மரங்கள் அதிகமாக விளைந்ததாலும், அந்தப் பிரம்பு மரத்தில் இருந்து பல பொருள் சாதனங்கள் இவ்வூர் மக்கள் தயாரித்து வந்ததாலும், இவ்வூருக்கு பிரம்பலூர் என்ற பெயர் வழங்கப்பட்டு வந்தது. பின்னர் காலபோக்கில் அப்பெயர் மருவி பெரம்பலூர் ஆக மாறியது என்று கூறுகின்றனர்.


4. திருப்பத்தூ
ர் – புத்தூர்
 
 
    குடியேறிய மக்கள் வாழும் புதிய ஊரானதால் புத்தூர் என அழைக்கப்பட்டது. பிறகு திரு என்னும் அடைமொழி சேர்க்கப்பட்டு திருப்புத்தூர் என்று வழங்கப்படலாயிற்று.
 
    இப்பகுதியில் அழகிய எறும்புப் புற்றுகள் நிறைந்துள்ள ஊர் என்னும் காரணத்தால் திருப்புற்றூர் என அழைக்கப்பெற்று வந்தது. பின் அப்பெயர் மருவி திருப்புத்தூர் என்று வழங்கப்பட்டது. இன்று அப்பெயர் மருவி திருப்பத்தூர் என்று வழங்கப்பட்டு வருகிறது.


5. கள்ளக்குறிச்சி – கல்லுக்குறிஞ்சி
 
 
    இப்பகுதி பெரும்பாலும் மலைகள் நிறைந்துள்ள பகுதியாகும். மலைகள் நிறைந்த பகுதி குறிஞ்சி என வழங்கப்பட்டது. இங்கு காணப்படும் மலைகள் பெரும்பாலும் கல் மலைகளாக இருப்பதால் கல்லுக்குறிஞ்சி என்று வழங்கப்பட்டு வந்தது. பின்னாளில் அப்பெயர் மருவி கள்ளக்குறிச்சி என வழங்கப்படலாயிற்று.
 
 
( ஊர்ப்பெயர்களின் பெருமைகளைத் தொடர்ந்து அறிவோம் . . . )
 
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020.
 
 

No comments:

Post a Comment