இதழ் - 175 இதழ் - ௧௭௫
நாள் : 21-09-2025 நாள் : ௨௧-௦௯-௨௦௨௫
சான்றோர் பெயரால் எழுந்த ஊர்கள்
திருக்கோலக்கா
சீர்காழிக்கு அருகே திருக்கோலக்கா என்னும் சோலைப்பதி உள்ளது. அப்பதியில் இளங்கையால் தாளமிட்டு இனிய தமிழ்ப்பாட்டிசைத்தார் திருஞானசம்பந்தர். இப்பாடலுக்கு இரங்கிய ஈசன் பிள்ளைப் பெருமானுக்குப் பொற்றாளத்தைப் பரிசாக அளித்தார். அன்று முதல் கோலக்காவில் உள்ள கோயில் திருத்தாளமுடையார் கோயில் எனப் பெயர் பெற்ற தென்றும் கூறுவர்.
ஏனையகாக்கள்
இன்னும், ஒரு நெல்லி வனத்தில் ஈசன் காட்சியளித்தமையால் திருநெல்லிக்கா என்னும் பெயர் அதற்கமைந்தது. திருவிடை மருதூரின் அருகேயுள்ள திருக்கோடிகா என்பது மற்றொரு சோலைக்கோவில். வைத்தீஸ்வரன் கோவிலுக்கு ஐந்து மைல் தூரத்திலுள்ள குரங்குக்கா என்பது மந்திச்சோலை. பாலைவனத்திலும் கொற்றவை என்னும் வீரத் தெய்வத்தைச் சோலையில் வைத்து மறவர்கள் வழிபட்ட முறை பழைய நூல்களில் காணப்படுகின்றது.
இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர்
துறைத்தலைவர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
No comments:
Post a Comment