பெயர்ச்சொல்லையும், வினைச்சொல்லையும் இடமாகக் கொண்டு செய்யுளுக்கு உரிமையுடைய சொற்கள் உரிச்சொற்கள் ஆகும். இது குறிப்பும் பண்பும் உணர்த்தி, இயல்பான பொருளுக்கு வேறான பொருளைக் குறிப்பாகத் தருவதாகவும் இருக்கும்.
- இசை, குறிப்பு, பண்பு என்னும் பொருட்கு உரியவாதலின் உரிச்சொல்லாயிற்று.
- சொல்லின் பகுதியாக அமைகின்ற அடிச்சொல்லே உரிச்சொல்லாகும்.
- இது பொருளின் தன்மையை மிகுதிப்படுத்தும்.
“பல்வகைப் பண்பும் பகர் பெயராகி
ஒரு குணம் பல குணம் தழுவிப் பெயர்வினை
ஒருவர் செய்யுட்குரியன உரிச்சொல்.”
- நன்னூல், நூற்பா. எண். 442
உரிச்சொல்லின் வகைகள்
உரிச்சொல் இரண்டு வகைப்படும்.
- ஒருகுணம் தழுவிய பல உரிச்சொல்
- பலகுணம் தழுவிய ஓர் உரிச்சொல்
இவ்வாறு தமிழ்மொழியின் இனிய இலக்கணப் பாங்கினை வரும் வாரங்களில் மேலும் அறியலாம்.
தி. செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment