பழமொழி – 19
“ மாமியாா் உடைச்சா மண்குடம் ”
” மருமகள் உடைச்சா பொன்குடம் “
மாமியார் ஏதேனும் தவறு செய்துவிட்டால் அது இயல்பானது என்றும் அதே தவறை மருமகள் செய்துவிட்டால் அதை பெரும் தவறெனச் சுட்டிக் காண்பிப்பர் எனவும் நாம் இப்பழமொழிக்குத் தவறாகப் பொருள் விளங்கிக் கொள்கிறோம்.
உண்மை விளக்கம்
“ மாமியார் உழைத்தால் மண்ணுக்கு
உரம் ”
” மருமகள் உழைத்தால் பொன்னுக்கு உரம் “
பிறந்த வீட்டிலிருந்து ஒருபெண் திருமணமாகி புகுந்த வீட்டிற்கு வந்தவுடன் அங்கு உள்ள விளைநிலத்தில் அப்பெண்ணின் மாமியார் உழைத்தால் அது தங்களின் நிலமேயாதலால் அது மண்ணுக்கு உரமெனக் கொள்வர். அதுவே புதிதாய் வந்த மருமகள் அம்மண்ணிற்கு உழைத்தால் பொன்னுக்கு உரமெனக் கொள்வர்.
ஏனெனில் அந்நிலத்தில் மாமியார் உழைப்பினை விட மருமகள் உழைப்பு மேலானதாகக் கருதப்படுகிறது. இதுவே மாமியார் உழைத்தால் மண்ணுக்கு உரம்; மருமகள் உழைத்தால் பொன்னுக்கு உரம் என்ற இப்பழமொழியின் உண்மைப் பொருளாகும்.
No comments:
Post a Comment