பக்கங்கள்

தமிழ்ச்சொல் தெளிவோம்

இதழ் - 22                                                                   இதழ் - ௨௨
நாள் : 25-09-2022                                                     நாள் : ௨௫-௦௯- ௨௦௨௨
 
 
 
 
போத்துக்கேய மொழிச் சொற்கள்
 
     உலகில் அதிகம் பேசப்படும் மொழிகளில் போத்துக்கேய மொழி ஆறாமிடம் வகிக்கிறது.  காலனித்துவ காலத்தில் உலகெங்கும் பரவியது இம்மொழி. தெற்கு ஐரோப்பியர்களான போத்துக்கேயர்கள்  பேசிய போர்த்துக்கேய மொழி தமிழ் மொழியில் கலந்து உள்ளமையைக் காணலாம்.

 
  • புனிதாவின் அலமாரியில் புடவைகள் நிறைந்து உள்ளன.
  • புனிதாவின் நிலைப்பேழையில் புடவைகள் நிறைந்து உள்ளன.
  • கதிரையில் மட்டுமே இருந்து பழகாதே.
  • நாற்காலியில் மட்டுமே இருந்து பழகாதே.
  • சப்பாத்துக் காலுடன் வீட்டுக்குள் வராதே.
  • காலணியணிந்த காலுடன் வீட்டுக்குள் வராதே.
  • எப்பொழுதும் குசினி சுத்தமாக இருக்க வேண்டும்.
  • எப்பொழுதும் சமையலறை சுத்தமாக இருக்க வேண்டும்.
  • அரசாங்க ஆசுப்பத்திரிகளில் மருத்துவ வசதி மிகச் சிறப்பாக உள்ளது.
  • அரசாங்க மருத்துவமனைகளில் மருத்துவ வசதி மிகச் சிறப்பாக உள்ளது.

 
 
( தொடர்ச்சி அடுத்த இதழில் . . . )
 

சாந்தி மகாலிங்கசிவம்

தமிழாசிரியர்
ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர் – 641020  

 

No comments:

Post a Comment