இதழ் - 79 இதழ் - ௭௯
நாள் : 29-10-2023 நாள் : ௨௯-௧0-௨௦௨௩
தமிழ்சொல் தெளிவோம்
தமிழ்நாட்டுத் தமிழில் கலந்துள்ள பிறமொழிச் சொற்கள் | தமிழ்சொற்கள் |
பெளர்ணமி | வெள் உவா |
அமாவாசை | கார் உவா |
விதி | நெறி |
ஞாபகம் | நினைவு |
அனுகூலம் | நன்மை |
- போதி மரத்தடியில் பௌர்ணமி நாளில் புத்தர் ஞானம் அடைந்தார்.
- போதி மரத்தடியில் வெள் உவா நாளில் புத்தர் ஞானம் அடைந்தார்.
- அமாவாசை அன்று பலர் நோன்பு நோற்ப்பார்கள்.
- கார் உவா அன்று பலர் நோன்பு நோற்ப்பார்கள்.
- விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
- நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
- என்னை ஞாபகம் இருக்கா?
- என்னை நினைவு இருக்கா?
- இதைச் செய்வதால் என்ன அனுகூலம் கிடைக்கும்?
- இதைச் செய்வதால் என்ன நன்மை கிடைக்கும்?
மேலும் வரும் வாரங்களில் தமிழ்மொழியில் வேறுமொழிகளின் சொற்கலப்பினை பிரித்துணர்ந்து அறிவோம்.
சாந்தி மகாலிங்கசிவம்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020.
No comments:
Post a Comment