பக்கங்கள்

தமிழக ஊர்களின் இன்றைய பெயரும் அன்றைய பெயரும்

இதழ் - 46                                                                                   இதழ் -  
நாள் : 12-03-2023                                                                     நாள் : ௧௨-0-௨௦௨௩
 
 
 
புரம்
 
     தமிழகத்திலுள்ள ஊர்ப்பெயர்களில் புரம் என்ற சொல் சிறந்த ஊர்களைக் குறிப்பதாகும். தொண்டை நாட்டின் தலைநகரம் தொடக்கத்தில் கச்சி என்றும் காஞ்சி என்றும் பெயர் பெற்றிருந்தது. பிற்காலத்தில் புரம் என்பது காஞ்சியோடு சேர்ந்தமையால் அது காஞ்சிபுரமாயிற்று. அந்நகரில் அரசு வீற்றிருந்த பல்லவ மன்னர் பெயரால் அமைந்த ஊர்கள் பல்லவபுரம் என்று முன்னாளில் பெயர்பெற்றன. அவை தற்பொழுது பல்லாவரம் என்று வழங்கப்பெறுகிறது. 

    சோழநாட்டை ஆண்ட பெரிய மன்னர்களும் தம்முடைய விருதுப் பெயர்களைப் பல ஊர்களுக்கு அமைத்தார்கள். இராஜராஜ சோழன் உண்டாக்கிய ஊர் ஜெயங்கொண்ட சோழபுரம். அது சில காலம் சோழ நாட்டின் தலைநகரமாக விளங்கிற்று. ஜெயங்கொண்டான் என்பது இராஜராஜனது பட்டப் பெயர்களில் ஒன்று.

     புரம் என்பது புரி எனவும் வழங்கும். சேலம் நாட்டில் தருமபுரி என்னும் ஊர் உள்ளது. தேவாரத்தில் திருநெல்வாயில் என்று குறிக்கப்பட்ட ஊர் இன்று சிவபுரியாயிருக்கின்றது. ஆண்டாள் பிறந்தருளிய ஸ்ரீவில்லிபுத்தூர் வைணவ உலகத்தில் கோதைபுரி என்றும் குறிக்கப்படும். அதேபோல பழனியின் பல பெயர்களில் ஒன்று வையாபுரியாகும்.
 
 
இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .
 
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment