பக்கங்கள்

இலக்கணம் கற்போம்

இதழ் - 116                                                                                                              இதழ் - ௧௧
நாள் : 14- 07 - 2024                                                                                           நாள் :  - 0 - ௨௦௨௪



வினைத்தொகை

  • காலம் காட்டும் இடைநிலையும் பெயரெச்ச விகுதியும் மறைந்து நிற்க, வினைப்பகுதியைத் தொடர்ந்து ஒரு பெயர் வந்து ஒரு சொல்லை போல் நடப்பது "வினைத்தொகை" எனப்படும்.

     “காலம் கரந்த பெயரெச்சம் வினைத்தொகை” 

                                 ( நன்னூல், நுற்பா. எண். 364 )

உதாரணங்கள்
  • ஆடுகொடி, வீசுதென்றல், வளர்தமிழ், ஊறுகாய், வெட்டுகத்தி

சான்று
  • வளர்தமிழ்
    இத்தொடரில் வளர் என்பது வினைப்பகுதி. இது தமிழ் என்னும் பெயர் சொல்லோடு சேர்ந்து காலம் காட்டாத பெயரெச்சமாக உள்ளது. 

    அதாவது, காலம் காட்டும் இடைநிலை தொக்கியுள்ளது. மேலும் இது வளர்ந்தமிழ், வளர்கின்ற தமிழ், வளரும் தமிழ்  எனவும் முக்காலத்திற்கும் பொருந்தும் படி பொருள் தருகிறது. இவ்வாறு காலம் காட்டும் இடைநிலையும் பெயரெச்ச விகுதியும் மறைந்து வரும் பெயரெச்சத்தை வினைத்தொகை என்பர்.


திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய 
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி 
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment