பக்கங்கள்

தமிழக ஊர்களின் இன்றைய பெயரும் அன்றைய பெயரும்

இதழ் - 66                                                                                            இதழ் -
நாள் : 30-07-2023                                                                             நாள் : 0-0-௨௦௨௩
 
 

 
 
களம்
 
    பொதுவாகக் களம் என்ற சொல் சமவெளியான இடத்தைக் குறிக்கும். சிதம்பரத்துக்கு அருகேயுள்ள திருவேட்களம் என்னும் ஊர் தேவாரப் பாடல் பெற்றத் தலமாகும். சிவபெருமானிடம் பாசுபதாஸ்திரம் பெறவேண்டி அர்ச்சுனன் அவர் அருளைப் பெறுதற்கு நெடுங்காலம் தவம் மேற்கொண்டு பெற்றமையால் இவ்விடம் வேட்ட களம் அல்லது திருவேட்களம் என்று பெயர் பெற்றது. அக்களமே இப்பொழுது அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் இருப்பிடமாக அமைந்திருக்கின்றது.

    சேர நாட்டிலுள்ள திருவஞ்சைக் களம் சேரமான் பெருமாள் காலத்தில் சிறந்ததோர் திருநகராக விளங்கிற்று. அஞ்சைக் களத்தில் அமர்ந்த ஈசனைச் சேரமான் தோழராகிய சுந்தரர் பாடிப் பரவினார்.
 
    களம் என்ற சொல்லின் அடியாகப் பிறந்த களத்தூர் என்பதும் ஊர்ப் பெயராகக் காணப்படுகின்றது. புகழேந்திப் புலவர் என்னும் தமிழ்க் கவிஞர் பிறந்த ஊர் களத்தூராகும். ஏனைய களத்தூர்களுக்கும் அவர் பிறந்த களத்தூருக்கும் வேற்றுமை தெரிதற்காகப் பொன் விளைந்த களத்தூர் என்று அவ்வூரைக் குறிப்பிட்டிருப்பது வெளிப்படுகிறது.

 
இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .
 
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment