இதழ் - 183 இதழ் - ௧௮௩
நாள் : 29 - 11 - 2025 நாள் : ௨௯ - ௧௧ - ௨௦௨௫
பழமொழி அறிவோம்
பழமொழி – 183
' ஏற்றப்பாட்டுக்கு எதிர்பாட்டு இல்லை '
விளக்கம்
ஏற்றம் இரைக்கும் போது ஏற்றப்பாட்டு பாடுவர். அதற்கு எதிர்பாட்டு பாடமுடியாது என்பது இப்பழமொழிக்கு விளக்கமாகும்.
உண்மை விளக்கம்
' ஏற்றப்பாட்டுக்கு எதிர்பாட்டு இல்லை '
வயலில் ஏற்றம் இரைக்கும் போது தம் களைப்பு தெரியாமல் இருக்க ஏற்றம் இரைப்பவர்கள் பாடல்கள் பாடுவர். இதில் எவ்வகையானை இலக்கணச் சந்தங்களும் இருக்காது. பாடும்போது இயற்கை வெளியில் என்ன தோன்றுகிறதோ அதைப் பயன்படுத்தி சொற்கள் அமைத்து பாடல்கள் பாடுவர். இவ்வாறு பாடும் பாட்டுக்கு எந்தச் சூழலிலும் விமர்சித்து பாடல் இயற்றவோ எதிர்ப்பாட்டு பாடவோ முடியாது என்பதைக் குறிக்கவே “ஏற்றப்பாட்டுக்கு எதிர்பாட்டு இல்லை” இப்பழமொழியை நம் முன்னோர்கள் பயன்படுத்தியுள்ளனர்.
இத்தகைய கிராமத்துப் பழமொழிகளின் பொருள்திறத்தினைத் வரும் வாரங்களில் தொடர்ந்து அறிவோம்...
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020

No comments:
Post a Comment