இதழ் - 107 இதழ் - ௧0௭
நாள் : 12-05-2024 நாள் : ௧௨-0ரு-௨௦௨௪
- இரண்டு சொற்கள் புணரும்போது (சேரும்போது) நிலைமொழியின் இறுதியில் உள்ள எழுத்து மகரமெய் (ம்) முதலில் கெடும். அடுத்து வருமொழியின் முதலில் உள்ள வல்லின எழுத்து மிக்குப் புணரும்.
சான்று
வட்டம் + கல் = வட்டக்கல்
- வட்டம் + கல் (மகரம் மெய் (ம்) கெடுதல்)
- வட்டக் + கல் (வருமொழியின் முதலில் உள்ள வல்லின எழுத்து (க்) மிகுதல்)
- வட்டக்கல் என ஆயிற்று
தமிழ்மொழியின் இனிய இலக்கணப் பாங்கினை வரும் வாரங்களில் மேலும் அறியலாம்...
திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment