பக்கங்கள்

இலக்கணம் கற்போம்

இதழ் - 195                                                                                 இதழ் - ௧
நாள்  :  22 / 03 / 2026                                                           நாள்   :   / 0 / ௨௦௨


இலக்கணம் கற்போம்
 
வாகைப்படலம்

வாகைப்படலம்

பகைவரை வென்று அதற்கு அறிகுறியாக வாகை மாலையைச் சூடுவது வாகைத்திணை எனப்படும்.

வாகைத்திணை துறைகள் மொத்தம் – 32

11. பொருநவாகை
பிறருடைய ஒவ்வாமை நோக்கியாரையும் இகழ வேண்டாம் என்பது.

12. அறிவன்வாகை
மூன்று காலத்தையும் உணர்ந்த அறிவனின் நிலையை எடுத்துரைப்பது.

13. தாபதவாகை
துறவியரின் தவநெறி பிறழாத வாழ்வினைப் போற்றி உரைப்பது.

14. கூதிர்ப்பாசறை
காமத்தை மிகுதிப்படுத்தும் கூதிர்ப்பருவத்திலும் அரசன் பாசறைக்கண் தங்குவது.

15. வாடைப்பாசறை
வாடைக்காற்று வீசிய நிலையிலும் அரசன் பாசறைக்கண் இருப்பது.

16. அரசமுல்லை
மறமாண்பினை உடைய அரசனின் நல்இயல்புகளை மிகுத்துக் கூறுவது.

17. பார்ப்பன முல்லை
அரசரின் பகை நீக்கிச் சந்து செய்து நட்பாக்கும் நடுவுநிலைமை உடைய பார்ப்பனனின் 
     சிறப்பைக் கூறுவது.

18. அவையமுல்லை
அறம்கூறும் சான்றோரின் தன்மையைக் கூறுவது.

19. கணிவன்முல்லை
காலத்தின் பகுதிகளைக் கணக்கிட்டு ஆராய்ந்து கூறும் புலவனின் திறத்தைச் சிறப்பிப்பது.

20. மூதின்முல்லை
பழமை வாய்ந்த மறக்குடியில் பிறந்த பெண்டியரின் மறப்பண்பினைச் சிறப்பித்துக் கூறுவது.

21. ஏறாண் முல்லை
மறக்குடியின் மேலோங்கும் ஒழுக்கத்தினைச் சிறப்பித்துக் கூறுவது.

இலக்கணம் தொடரும் . . .

திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய 
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி 
கோயம்புத்தூர்- 641020

No comments:

Post a Comment