- ஒரு காலத்தில் இலங்கை ரேடியோ நிகழ்ச்சிகளைக் கேட்பது பலருக்குப் பிடித்தமானதாக இருந்தது.
- ஒரு காலத்தில் இலங்கை வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்பது பலருக்குப் பிடித்தமானதாக இருந்தது.
- பிளாட்பாரத்தில் கடைகளை வைக்கக் கூடாது.
- நடைபாதையில் கடைகளை வைக்கக் கூடாது.
- சொர்க்கம் வானத்தில் இருக்கிறது என்பது ஐதீகம்.
- சொர்க்கம் வானத்தில் இருக்கிறது என்பது உலக வழக்கு.
- எனது குமாரனது பிறந்தநாள் விழாவிற்கு உங்களை அழைக்கிறேன்.
- எனது மகனது பிறந்தநாள் விழாவிற்கு உங்களை அழைக்கிறேன்.
- இந்தப் படிவத்தை ஜெராக்ஸ் எடுக்க வேண்டும்.
- இந்தப் படிவத்தை ஒளிப்படி எடுக்க வேண்டும்.
மேலும் வரும் வாரங்களில் தமிழ்மொழியில் வேறுமொழிகளின் சொற்கலப்பினை பிரித்துணர்ந்து அறிவோம்...
சாந்தி மகாலிங்கசிவம்
தமிழாசிரியர்ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment