இதழ் - 110 இதழ் - ௧௧0
நாள் : 02-06-2024 நாள் : 0௨-0௬-௨௦௨௪
பழமொழி – 110
" உண்ணுந் துணைக்காக்கும் கூற்று "
விளக்கம்
தான் உண்ணும் காலம் வரையும் காவல் காத்து நிற்பவன் நல்ல நண்பன் என்பது இப்பழமொழியின் பொருளாகும்.
" உண்ணுந் துணைக்காக்கும் கூற்று "
உண்மை விளக்கம்
கண்ணுள் மணியேபோல் காதலாய் நட்டாரும்
எண்ணும் துணையில் பிறராகி நிற்பராய்
எண்ணிஉயிர் கொள்வான் வேண்டித் திரியினும்
'உண்ணுந் துணைக்காக்கும் கூற்று'.
நல்ல நண்பர்கள் ஒருவர் மற்றொருவரைத் தன் கண்ணின் மணியைப் போலக் காத்து நிற்பர். போலி நண்பர்கள் அவர்களின் தேவை முடிந்த பின் தன் நட்பை மறந்து விடுவர். இத்தகைய போலி நண்பர்களின் நட்பை ஆராய்ந்து அறிந்து அவர்களிடமிருந்து விலகி இருத்தல் வேண்டும் என்பதை விளக்கவே 'உண்ணுந் துணைக்காக்கும் கூற்று' என்ற இப்பழமொழி பொருள் உணர்த்துகிறது.
மேலும், இத்தகைய பழமொழிகளின் மூலம் நமது முன்னோர்களின் சொற்திறத்தினை வரும் வாரங்களில் காணலாம்...
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment