இதழ் - 143 இதழ் - ௧௪௩
நாள் : 02 - 02 - 2025 நாள் : ௦௨ - ௦௨ - ௨௦௨௫
வினா வகை
ஐய வினா
- ஐயம் நீங்கி தெளிவு பெறுவதற்காகக் கேட்கப்படும் வினா ஐயவினா ஆகும்.
சான்று
- அங்கே கிடப்பது பாம்பா? கயிறா?
- இச்செயலை செய்தது ராமுவா? சோமுவா?
கொளல் வினா
- தான் ஒரு பொருளை வாங்கிக் கொள்ளும் பொருட்டு வினவுவது கொளல்வினா ஆகும்.
சான்று
- 'ஜெயகாந்தன் சிறுகதைகள் இருக்கிறதா?' என்று நூலகரிடம் வினவுதல்.
- 'பருப்பு உள்ளதா? வணிகரே' என்று கடைக்காரரிடம் வினவுதல்.
திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர்- 641020
No comments:
Post a Comment